முகமுதுவின் தாயார் ஆமீனா
கடந்த வாரம், முஹம்மவின் இளமைக் காலம் பற்றிய சில குறிப்புகளுக்காக இணையத்தில் தேடிக்கொண்டிருந்த பொழுது தற்செயலாக islam4theworld.net என்றொரு இஸ்லாமிய தளத்தை பார்வையிட நேர்ந்தது.
Why another Rasul (Messenger) in Arabia என்ற பதிவில் முஹம்மதின் பெற்றோர்களைப்பற்றி மிக சுருக்கமாக விவரித்திருந்தார்கள். எல்லா இஸ்லாமிய தளங்களும் இதைத்தானே செய்துகொண்டிருக்கின்றன புதிதாக இதில் என்ன விஷயம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா?
விஷயமல்ல விவகாரமே இருக்கிறது!
அதற்கு முன் முஹம்மதின் பாட்டனார் அப்துல் முத்த்லீப் தனது சந்ததியினரை பெருக்கிக்கொண்ட கதையை சுருக்கமாக பார்த்துவிடுவோம்.
அப்துல் முத்தலிப் தனக்கு ஹாரித் என்ற ஒரு மகனைத் தவிர, நீண்டகாலமாக வேறு குழந்தைகள் இல்லையே என்று ஏங்கித் தவித்தவராக இருந்தார். தனக்கு பத்து மகன்கள் பிறந்து, அவர்கள் வாலிப வயதை அடைந்தால், அவர்களில் ஒருவரை தனது கடவுளான ஹபலுக்கு பலியிடுவதாக வேண்டிக்கொள்கிறார். என்ன ஆச்சரியம்..! அப்துல் முத்தலீபிற்கு பத்து மகன்கள் பிறந்து வாலிப வயதை அடைகின்றனர்.
எப்படி ?
அந்தப்புரத்தில் மனைவியர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் என்ற அறிவுபூர்வமான யுக்தியை செயல்படுத்துகிறார்.
முதல் மனைவி ஸும்ரா பின்த் ஜனத்ப் பிற்கு
ஹாரித் இப்ன் அப்துல் முத்தலீப்
இரண்டாம் மனைவி லுப்னா பின்த்
ஹஜர்-க்கு
அப்துல் உஜ்ஜா இப்ன் அப்துல் முத்தலீப் (அபூ லஹ்ப்)
மூன்றாம் மனைவி ஃபத்திமா பின்த் அம்ர்-க்கு
அபூதாலிப் இப்ன் அப்துல் முத்தலீப்
அல்-ஜுபைர் இப்ன் அப்துல் முத்தலீப்
அப்துல்லா இப்ன் அப்துல் முத்தலீப்
நான்காம் மனைவி ஹாலா பின்த் வஹ்ப்-பிற்கு
ஹம்ஸா இப்ன் அப்துல் முத்தலீப்
குத்தம் இப்ன் அப்துல் முத்தலீப்
ஹிஜில் இப்ன் அப்துல் முத்தலீப்
ஸஃபியா பின்த் இப்ன் அப்துல் முத்தலீப்
ஐந்தாம் மனைவி நாதிலா பின்த் குபப் அல் கஸ்ரஜ்-க்கு
அப்பாஸ் இப்ன் அப்துல் முத்தலீப்
தரார் இப்ன் அப்துல் முத்தலீப்
இப்படியாக ஸஃபியா என்றொரு மகளுடன் பத்து மகன்கள் என்ற தனது இலக்கை வெற்றிகரமாக அடைகிறார். அவர்கள் வாலிப வயதை அடைந்தவுடன், முன்னர் வாக்களித்தவாறு, ஒருவிதமான குருட்டு தைரியத்தில் எந்த மகனை பலியிடுவதென்று அறிய அம்புகளில் பெயரை எழுதி ஹபல் என்ற தங்களது கடவுளின் சிலையின் முன்னிலையில் குலுக்கல் முறையைத் தேர்தெடுக்க, அதில் அப்துல்லாவின் பெயர் வந்துவிடுகிறது. உடனே மகனை அறுத்து பலியிடுவதற்கு அவரென்ன காட்டுமிராண்டி இப்ராஹீமா?
அதனால் அறிவுபூர்வமாக ஹபலுக்கு அல்வா கொடுக்க நினைக்கிறார். மீண்டும் அம்புகளை வைத்து குலுக்கல் முறையில் ஹபலுடன் பேரம் பேசுகிறார். அல்லாஹ்வுடனே பேரம் பேசுவது இருக்கையில் ஹபலுடன் பேரம் பேசுவதில், நாம் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
பலியாக பத்து ஒட்டகம் வேண்டுமா அல்லது அப்துல்லா வேண்டுமா என்று பேரம் துவங்குகிறது. ஹபல், அப்துல்லாதான் வேண்டும் என்று அம்பின் மூலம் கூறிவிடுகிறது. அதிர்ச்சியடைந்த முத்தலீப் மீண்டும் இருபது ஒட்டகமா அல்லது அப்துல்லாவா என்கிறார். ஹபல், அப்துல்லாவைத் தேர்தெடுக்கிறது. பத்து ஒட்டகங்கள் என்ற வீதத்தில் எண்ணிக்கை அதிகரித்தவாறு பேரம் நீண்டு கொண்டே செல்கிறது. அப்துல் முத்தலீப் விடுவதாக இல்லை ஹபலும் விடுவதாக இல்லை. இறுதியில் நூறு ஒட்டகமா அல்லது அப்துல்லாவா என்ற பெரிய பேரத்தை முவைக்கிறார். ஹபல் சலிப்படைந்து விட்டது போலும், இவன் இப்படியே பேரம் பேசிப்… பேசி…ப்… வெறுப்பேற்றி பைத்தியம் பிடிக்க வைத்துவிடுவான் என்று அஞ்சியோ… என்னவோ நூறு ஒட்டகங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டது. ஹபல் மட்டும் தனது முடிவில் உறுதியாக இருப்பின் நாம் ”இறையில்லா இஸ்லாம்” என்ற இந்த இணையதளத்தை இயக்கவேண்டிய தேவை இருந்திருக்காது! முஸ்லீம்கள் ஹபலுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டவர்கள்!
அப்துல் முத்தலீப் நூறு ஒட்டகங்களை அறுக்க முடிவு செய்கிறார். இத்தனை ஒட்டகங்களின் இறைச்சியையும் முத்தலீபும் அவரது மகன்கள் மட்டுமே தின்று தீர்க்க முடியாது. எனவே தனது உற்றார், உறவினர், நண்பர்கள் என்று எல்லோரையும் அழைத்து பெரும் விழாவாகக் கொண்டாடுகிறார்.
அந்த விழாவிற்கு பின்னர் ”ஜுஹ்ரா” குலத்தின் தலைவர் வஹ்ப் பின் அப்து மனாஃப் பின் ஜுஹ்ராவின் இல்லத்திற்கு செல்லும் முத்தலீப், அங்கு வஹ்ப் பின் அப்து மனாஃபின் பாதுகாப்பில் இருந்த அவரது சகோதரர் மகள் ஆமீனா பின்த் வஹ்பை தனது மகன் அப்துல்லாவிற்கு திருமணம் செய்துதருமாறு கோரிக்கை வைக்கிறார்; வஹ்ப் சம்மதிக்கிறார். விஷயம் இத்துடன் முடிந்திருந்தால் பரவாயில்லை.
அங்கிருந்த வஹ்ப் பின் அப்து மனாஃபின் மகள் ஹாலா பின்த் வஹ்ப்-ன் மீது அப்துல் முத்தலீப்பின் கண்கள் பாய, ஹாலா பின்த் வஹ்பைத் தனக்குத் திருணம் செய்து தருமாறு மீண்டும் கோரிக்கை வைக்க, அதற்கும் அவர் சம்மதிக்கிறார். இவ்வாறாக அப்துல் முத்தலீபிற்கும் அவரது மகன் அப்துல்லாவிற்கும் ஒரே நாளில், ஒன்றாக திருமணம் நிகழ்கிறது. ஆமீனாவும் ஹாலாவும் ஏறக்குறைய சமவயதுடையவர்கள். இன்னும் சில அறிவிப்புகளில் திருமணத்திற்குமுன் அப்துல்லாவின் முகத்தில் ஒருவிதமானா பிரகாசம் தென்பட்டதாகவும் (வேறென்ன முஹம்மதுதான்!) அதைப்பெற்றுக்கொள்ள பெண்கள் பலர் போட்டியிட்டனர்; இறுதியில் அந்த வாய்ப்பு ஆமீனாவிற்கு கிடைத்தது என்றும் கூறுகின்றனர்.
திருமணம் முடிந்தவுடன் வழக்கமாக எல்லோரும் என்னென்ன செய்வார்களோ அதைத்தான் தந்தையும் மகனும் தவறாமல் செய்தனர். கிளுகிளுப்பாக சில நாட்கள் கழிந்த்து. கிளுகிளுப்பு போதும் மகனே! வியாபரத்தை கவனிக்க கிளம்பு என்று அப்துல்லாவை ஷாம்(தற்பொழுதைய ஈராக்-சிரியா) தேசத்திற்கு அனுப்புகிறார். பல மாதங்கள் அவர் அங்கேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. பணியை முடித்து திரும்பி வரும் வழியில் நோய்வாய்ப்படும் அப்துல்லா யஸ்ரிப்பி(மதீனா)லிருந்த உறவினர் வீட்டில் சில மாதங்கள் தங்கி சிகிச்சை பெறுகிறார். செய்தியைக் கேள்விப்பட்ட முத்தலீப் தனது முத்த மகன் ஹாரிதாவை அப்துல்லாவை அழைத்துவர அனுப்புகிறார். அப்துல்லாவின் வியாபாரக்குழு அடங்கிய மூடுவண்டிகள் யஸ்ரிப்பி(மதீனா)லிருந்து மக்காவிற்கு கிளம்பிய பொழுதே அப்துல்லா இறந்து, உடல் அடக்கம் செய்யப்பட்டுவிட்டதாகவும் அறிகிறார். அப்பொழுது அப்துல்லாவின் வயது இருபத்து ஐந்து.
அப்துல்லா ஷாம் செல்வதற்கு முன்பே ஆமீனாவின் வயிற்றில் தனது கருவை விதைத்திருந்தார். முத்தலீப் மட்டும் சளைத்தவரா என்ன? அவரும் தனது புது மனைவி ஹாலாவின் வயிற்றில் ஒரு சிங்கக்குட்டியை உருவாக்கிவிட்டார். அந்த சிங்கக் குட்டி வேறுயாருமல்ல ஹம்ஸா இப்ன் அப்துல் முத்தலீப் தான்! ஆமீனாவின் வயிற்றிலிருப்பது நமது கதாநாயகர் சூப்பர் ஸ்டார் முஹம்மது என்பதை அறிவீர்கள்.
இதில் என்ன குழப்பம் என்கிறீர்களா?
ஒரே நாளில் முத்தலீப்பிற்கும் அப்துல்லாவிற்கும் திருமணம் நிகழ்ந்ததாகவும், திருமணத்திற்குப் பிறகு வியாபார விஷயமாகச் சென்ற அப்துல்லா திரும்பிவரவேயில்லை என்பது மட்டுமல்ல இறந்தும் விடுகிறார். அவர் அப்படிச் சென்றபொழுதுதே ஆமீனா கர்ப்பிணியாக இருந்ததாகவும் islam4theworld.net இணையதளம் கூறுகிறது. அப்படியானால் ஹம்ஸாவும் முஹம்மதுவும் சமவயதுடையவர்களாக இருக்கவேண்டும் அல்லது ஹம்ஸா முஹம்மதைவிட வயதில் இளையவராக மட்டுமே இருக்கமுடியும்.
ஆனால், அல்லாஹ்வின் சிங்கம் என வர்ணனை செய்யப்படும் ஹம்ஸா இப்ன் அப்துல் முத்தலீப், கிபி 625 நிகழ்ந்த உஹது போரில் வஹ்ஷி இப்ன் ஹர்ப் என்பவரால் கொல்லப்படுகிறார். இஸ்லாமிய ஆதாரங்கள், அப்பொழுது ஹம்ஸாவின் வயது 59 என்கிறது. அதாவது ஹம்ஸா, முஹம்மதை விட நான்கு வருடங்கள் முதியவர். 625-59=566. ஹம்ஸா கிபி 566-ல் பிறந்திருக்கிறார். (சிலர் ஹம்ஸா, முஹம்மதைவிட 2 – 4 ஆண்டுகள் முதியவராக இருக்கலாம் என்கின்றனர்)
இது எப்படி சாத்தியமாகும்?
நான்கு வருடங்களாக முஹம்மது, தனது தாயார் ஆமீனாவின் கர்ப்பத்தில் என்ன செய்து கொண்டிருந்தார்?
@இறையில்லா இஸ்லாம் தள பதிவு.
இதில் என்ன குழப்பம் என்கிறீர்களா?
ஒரே நாளில் முத்தலீப்பிற்கும் அப்துல்லாவிற்கும் திருமணம் நிகழ்ந்ததாகவும், திருமணத்திற்குப் பிறகு வியாபார விஷயமாகச் சென்ற அப்துல்லா திரும்பிவரவேயில்லை என்பது மட்டுமல்ல இறந்தும் விடுகிறார். அவர் அப்படிச் சென்றபொழுதுதே ஆமீனா கர்ப்பிணியாக இருந்ததாகவும் islam4theworld.net இணையதளம் கூறுகிறது. அப்படியானால் ஹம்ஸாவும் முஹம்மதுவும் சமவயதுடையவர்களாக இருக்கவேண்டும் அல்லது ஹம்ஸா முஹம்மதைவிட வயதில் இளையவராக மட்டுமே இருக்கமுடியும்.
ஆனால், அல்லாஹ்வின் சிங்கம் என வர்ணனை செய்யப்படும் ஹம்ஸா இப்ன் அப்துல் முத்தலீப், கிபி 625 நிகழ்ந்த உஹது போரில் வஹ்ஷி இப்ன் ஹர்ப் என்பவரால் கொல்லப்படுகிறார். இஸ்லாமிய ஆதாரங்கள், அப்பொழுது ஹம்ஸாவின் வயது 59 என்கிறது. அதாவது ஹம்ஸா, முஹம்மதை விட நான்கு வருடங்கள் முதியவர். 625-59=566. ஹம்ஸா கிபி 566-ல் பிறந்திருக்கிறார். (சிலர் ஹம்ஸா, முஹம்மதைவிட 2 – 4 ஆண்டுகள் முதியவராக இருக்கலாம் என்கின்றனர்)
இது எப்படி சாத்தியமாகும்?
நான்கு வருடங்களாக முஹம்மது, தனது தாயார் ஆமீனாவின் கர்ப்பத்தில் என்ன செய்து கொண்டிருந்தார்?
@இறையில்லா இஸ்லாம் தள பதிவு.